2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

குருநாகல் மாநகர சபை முதல்வருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குருநாகல் மாநகர சபை முதல்வர் துஷார சஞ்சீவ, அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இவர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாது புறக்கணித்து வந்தமைக்காக இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குருநாகல் மாநகர சபை முதல்வர் துஷார சஞ்சீவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .