2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

கொம்பனித்தெரு கொலை; ஐவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனித்தெரு, முத்தைய்யா வீதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளை அடுத்து, இன்று அதிகாலை 12.30 மணியளவில் அழகுக்கலை நிலையமொன்றின் முகாமையாளர், சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்திருந்தார்.

அல்கந்தவல, ராகலவெல, பாயகல பகுதியைச் சேர்ந்த, 47 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பகுதியை சேர்ந்த 17 வயதுக்கும் 22 வயதுக்கும் உட்பட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .