டெங்கு தீவிரம் நாளாந்தம் அறிக்கையிட குழு நியமனம்

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் அன்றாடம் அறிக்கை இடுவதற்குச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.   

நாடளாவிய ரீதியில் உள்ள சகல வைத்தியசாலைகளிலிருந்தும் தகவல்களைத் திரட்டி, நாளாந்தம் தயாரிக்கப்படும் அறிக்கை, சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்கப்படும்.   
இந்தக் குழுவில், குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, உடல்நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, டெங்கு ஒழிப்புப் பிரிவின் நிபுணர் வைத்திய ஹசித திசேரா மற்றும் சுகாதார அமைச்சின் வைத்தியர் உபுல் குணசேகர ஆகியோர் அடங்குகின்றனர்.   

டெங்குக் காய்ச்சலால், நாடளாவிய ரீதியில் இதுவரையிலும் 63 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் மணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.   

எதிர்வரும் மாதங்களில் நிலைமையின் தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன், நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் சுட்டிக்காட்டியுள்ளது.   

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலைமையுடன் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  


டெங்கு தீவிரம் நாளாந்தம் அறிக்கையிட குழு நியமனம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.