நவம்பர் 9இல் வரவு செலவுத் திட்டம்

2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் இன்று (13) அறிவித்தது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்த விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளதுடன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 10,11,13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் குழுநிலை விவாதத்தை 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பினை டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி தெரிவித்தார்.


நவம்பர் 9இல் வரவு செலவுத் திட்டம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Loading...
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.