2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாவணர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்கும் வேலைத்திட்டத்தை, கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை என்பன இணைந்து முன்னெடுக்க உள்ளன.

அதன்படி  பாடசாலைகளை அண்மித்தாக காணப்படும் போதைப்பொருள் விற்பனைத் தளங்கள் மேல்மாகாணத்திலேயே அதிகம் காணப்படுகின்றதெனவும்,  கொழும்பிலுள்ள 49 பாடசாலைகளை இலக்காக கொண்டு 'பாதுகாப்பான நாளைய தினம்' என்ற வேலைத்திட்டம் கல்வி அமைச்சில் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிக்கையில்,

மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் மாத்திரம் 2,30,982 மாணவர்கள் ஹெரோயின்,கஞ்ஞா, போதை மாத்திரை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதாக தெரிவித்துள்ளார்,

மாணவர்களை இலக்காக கொண்டு போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதால், மாணவர்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனால், பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை, பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் வழங்குவதற்கு   0777128128 என்ற அழைபேசி இலக்கத்தையும் அறிமுகப்படுத்தி வைப்பதாக தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .