2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

'பதவியில் இல்லாதவர்களுக்கான “அமைப்பு” வேண்டும்'

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான அமைப்பினை உருவாக்குமாறு முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் மற்றும் அதற்கு முந்தைய காலப்பகுதியில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளை வகித்து தற்போது நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்காதவர்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் இந்த அமைப்பினை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்களுடன், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் உறுப்பினர்களின் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் ஊடாக கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .