பாம்புகளைக் காட்டிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

விச பாம்புகளை காட்டி  பயமுறுத்திக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை, எதிர்வரும் 23 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடு நுவான் என்கிற நுவான் குமாரா ஆலியாஸ் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குடு நுவான் பாம்பு பிடிக்கும் பழக்கத்தைக்கொண்டவர் என தெரிவிக்கும் கம்பளை பொலிஸார், பாம்புகளை கயிறாக பயன்படுத்தி மக்களை கட்டிப்போட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்னாசி விற்பனை செய்துவந்த வர்த்தகர் ஒருவரிடம் பாம்புகளை காட்டிக்  கொள்ளையிட முயன்றபோது குறித்த நபர் பொதுமக்களால் மடக்கப்பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


பாம்புகளைக் காட்டிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.