ரோசியின் உத்தியோகப்பூர்வ மலசலக்கூட கட்டமைப்புக்கு 5.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு

கொழும்பு நகர மேயர் ரோசி சேனநாயக்கவின் மலசலக்கூட கட்டமைப்புக்காக, 5.7 மில்லியன் நிதியை வழங்க சபை  இன்று (16) அனுமதி வழங்கியள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நவீன வசதிகளுடன், அமைக்கப்பட்ட குறித்த மலசலக்கூட கட்டமைப்பை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு கொழும்பு மாநகர சபையின் பல உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரம் உள்ளிட்ட கொழும்பின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை புனரமைப்பு செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் நகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் காலத்தில் நகர மேயரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தின் மலசலக்கூட கட்டமைப்பானது சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுமித் பஸ்ஸபெரும தெரிவித்தார்.

மேலும் நவோத மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான நவோதய கிருஸ்ணாவும்  இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு தனது எதிர்ப்பினை தெரிவிப்பதாக எமது பத்திரிகைக்கு  தெரிவித்தார்.

இதேவேளை, இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நகர மேயர் ரோசி சேனாநாயக்க தமது உத்தியோகப்பூர்வ இல்லத்தின் மலசலக்கூட கட்டமைப்பை மாத்திரம்  நவீன மயப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும், நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தன்னால் அங்கு சென்று வசிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

 


ரோசியின் உத்தியோகப்பூர்வ மலசலக்கூட கட்டமைப்புக்கு 5.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.