2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிந்துலை நகரசபை உறுப்பினர் வீட்டிலிருந்து 11 வயது சிறுவன் மீட்பு

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்,டி.சந்ரு

அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

விதுர்ஷன் என்ற 11 வயது சிறுவனையே, நுவரெலியா பொலிஸார், நேற்று (7) மீட்டுள்ளனர். இச்சிறுவனது தாய், குறித்த உறுப்பினரின் வீட்டில், கடந்த எட்டு வருடங்களாகப் பணிபுரிந்து வருபவரென்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சிறுவனுக்குப் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லையென்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக, நுவரெலியாவிலுள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில், சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது (தற்போது வயது 6) சிறுமியின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் தலைவர், உறுப்பினர் இசார மன்சநாயக்க உள்ளிட்ட எண்மர் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .