வீதி விபத்தில் தந்தை, குழந்தை பலி; மனைவி காயம்

எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 31 வயது நபர் ஒருவரும் அவரது குழந்தையும் உயிரிழந்துள்ளதோடு, அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை எல்ல - கும்டுக்வெல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவரும் பயணித்த கார் வீதியில் குடைசாய்ந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மூவரும் பதுளை வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 31 வயது நபரும், 3 வயது குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மனைவி தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத்  தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


வீதி விபத்தில் தந்தை, குழந்தை பலி; மனைவி காயம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.