2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்தங்களில் 4பேர் பலி; 13 இலட்சம் பேர் பாதிப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 மாவட்டங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை காலை வரையிலான கடந்த 15 நாட்களாக இடம்பெற்ற அனர்த்தங்களில் நால்வர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த அனர்த்தங்களால் 3 இலட்சத்து 78,556 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்து 20,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவேளை இவ்வனர்த்தங்களால் 4பேர் காயமடைந்துள்ளதுள்ளனர். மாத்தளையில் ஒருவரும் கேகாலையில் ஒருவரும்  திருகோணமலையில் இரண்டு பேரும் பலியாகியதுடன் கேகாலை 4பேர் காயமடைந்துள்ளனர்.

வரட்சி, மழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, காற்று மற்றும் மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களிலேயே அவர்கள் சிக்கியுள்ளனர்.
இதேவேளை, மொனராகலை, பதுளை, பொலநறுவை, அனுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, மற்றும் மாத்தளை ஆகிய 14 மாவட்டங்களிலும் 24 வீடுகள் முற்றாக சேதமடைந்து 223 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன.

இதேவேளை, களுத்துறை வலலாவிட்ட, புளத்சிங்கள, பாலிந்தநுவர, மற்றும் அகலவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் மற்;றும் மண்திட்டு சரியும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் எதிர்வு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .