6 வருடங்கள் பதவி வகிக்கலாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்கள் பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் இதற்கு தடையில்லை என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

19 ஆவத திருத்தச் சட்டத்துக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றபோது குறித்த சட்டம் அமுலுக்கு வராத​தையடுத்து 6 வருடங்கள் தான் பதவி வகிக்க முடியுமா? என உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருந்தார்.

இதற்கமைய விடயம் தொடர்பில் ஆராந்த சட்டமா அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  6 வருடங்கள் பதவி வகிப்பதில் எந்தவித தடையும் இல்லை என உயர்நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

 


6 வருடங்கள் பதவி வகிக்கலாம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.