2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பொல்லால் தாக்கி காயப்படுத்தியவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                      

திருகோணமலை பிரதேசத்தில் ஒருவரை அடித்து காயப்படுத்திய நபர் ஒருவரை எதிர்வரும்  23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா இன்று திங்கட்கிழமை (14) உத்தரவிட்டார்.                           

திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                        

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது, குறித்த சந்தேகநபர் ஒருவரை பொல்லால் தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்து இன்று(14) பொலிஸார் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.                                 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .