2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மனைவியைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, புல்மோட்டையில் மனைவியை அடித்துத் துன்புறுத்திய நபரொருவரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.  
     
புல்மோட்டை, அரபாத்நகரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மனைவியைத் தாக்கியுள்ளதாக புல்மோட்டைப் பொலிஸ் நிலையத்தில் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளைப் புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .