2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் எரிக்கப்பட்ட குடில்களின் காணி உரிமை குறித்து விசாரணை

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கிண்ணியா கண்டல் காடு பகுதியில் எரிக்கப்பட்ட குடிசைகள், காணி உரிமையாளர்களுக்கு சொந்தமானவையா என்பது தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை மாவட்ட அரச அதிபரால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை கண்டல் காடு பிரதேசத்தில் மீளக்குடியேறியவர்கள் அமைத்திருந்த 35 குடிசைகள் அத்துமீறீ குடியேறிவரியவர்களினுடையவை எனக் கூறி தீ வைக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையத்தளம் கிண்ணிய பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.

அத்துடன் "இது தொடர்பிலான உயர்மட்ட மாநாடொன்று நாளை மாவட்ட செயலாளர் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதன் பின்னரே இக்குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.


 


  Comments - 0

  • vicky Wednesday, 03 November 2010 12:48 AM

    இலங்கைல் யாரும் எதயும் எரிக்கலாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--