2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மூதூரில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மூதூர் தாஹா நகரினை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரை 250 கிராம் கஞ்சாவுடன் அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 2 மணியளவில் மூதூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் குறித்த நபரின் வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் 250 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியதுடன் சந்தேகநபரினையும் கைதுசெய்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மூதூர் பொலிஸார் குறித்த பெண்ணினை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .