2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 18 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு (13) கைதுசெய்ததாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் கிண்ணியா மற்றும் உப்புவெளி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இவர்களுடைய வள்ளங்களை சோதனை செய்த வேளையில்  சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மூன்று வள்ளங்களுடன் இந்தப் 18 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .