2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

ஒசுசல மருந்தகத்தை திறக்கக் கோரிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்  

திருகோணமலை,  மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூரில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல கிளையைத்  திறந்துதருமாறு பிரதேச மக்கள் உரிய பகுதியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோப்பூரில் ஒசுசல மருந்தகம் திறக்கப்படாமையால் இங்குள்ள நோயாளர்கள் வைத்தியர்கள் பரிந்துரைக்கின்ற தரமான உரிய  மருந்துப்பொருள்களை நியாய விலையில் கொள்வனவு செய்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு,  கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களுக்குச் சென்றுகூட  சில மருந்துகளை வாங்கவேண்டியுள்ளதாகவும் நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோப்பூரில் ஒசுசல கிளையொன்றைத் திறப்பதன் வாயிலாக தோப்பூர் மட்டுமன்றி இதற்கு அண்மையிலுள்ள வெருகல், மூதூர், சேருவில  உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மூவின மக்களும் நன்மை பெறுவார்கள். இது குறித்து உரிய பகுதியினர் கவனம் செலுத்தவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .