Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மாவட்டத்தில் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவரை வெவ்வேறு இடங்களில் வைத்து இன்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய், பொலிஸ் பிரிவில் 500 மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இருவரை யும், திருகோணமலை, தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 200 மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 36, 52 வயதுடைய இருவரும், சுமேதக பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதுடன், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .