Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆறு பொலிஸ் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்ட்டிருந்த 12 பேர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகி இருந்தவர்களே, கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனக்குடா பொலிஸாரினால் இருவரும் கிண்ணியா பொலிஸாரினால் இருவரும் மொறவெவ பொலிஸாரினால் இருவரும் மூதூர் பொலிஸாரினால் நான்கு பேரும் குச்சவௌளி மற்றும் சேறுநுவர பொலிஸாரினால் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை மற்றும் மூதூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .