2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தோணி கவிழ்ந்து மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் - கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர், மாவிலாறு குளத்தில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி, இன்று (15) உயிரிழந்துள்ளனரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்குனுகொல்ல-அரக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள், மூதூரில் திருமண வீடொன்றுக்கு  வருகை தந்த போது, மாவிலாறு குளத்தைப் பார்வையிட சென்ற வேளை, தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து, தோணி கவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .