2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

 

கிழக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகள் திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு, பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் திணைக்களத்தில்  பரிசாரகர்களாக  கடமையாற்றும் 120 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதுடன், சாதாரண தொழிலாளர்கள் 270 பேருக்கும் பதவி உயர்வுகள்  வழங்கப்படவுள்ளதாகவு அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காணப்படுகின்றன குறைபாடுகளை நிவர்த்திக்கும் முகமாக, 800 பேர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

புதிய நியமனங்கள் வழங்கப்படுகின்ற பட்சத்தில், அனைத்து வைத்தியசாலைகளில் காணப்படும் அனைத்து ஊழியர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியும் எனவும் எதிர்காலத்தில் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .