2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

யான் ஓயா பெருக்க வாய்ப்பு

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக, திருகோணமலை புல்மோட்டையில்  அமைந்துள்ள யான் ஓயா பெருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு, திருகோணமலை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை இன்னும் ஓரிரு தினங்கள் நீடித்தால்,  யான்  ஓயா வான் கதவு எந்த நேரத்திலும்  திறக்கப்படலாம். அவ்வாறு திறக்கப்பபட்டால், புல்மோட்டை, குச்சவெளி பிரதேசங்களில் வயல் நிலங்கள், காடுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

எனவே, மேற்கூறிய பிரதேசங்களில் ஆற்றுநீர் மீன்பிடிக்கச் செல்வோரும் நெல்வயல்களில் காவலில் இருப்பவர்களும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--