2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

துடுப்பாட்ட வீரர்களுக்கே பொறுப்பு: மத்தியூஸ்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையில் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களே ஓட்டங்களைப் பெற வேண்டுமென, அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டிசெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, போர்ட் எலிஸபெத்தில் இடம்பெறவுள்ளது.

இத்தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், "துஷ்மந்த சமீர, அணிக்குள் மீண்டும் வருவதோடு, இளம் வீரரான விகும் சஞ்சயவுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ள நிலையில், எதிரணியை அழுத்தத்துக்கு உள்ளாக்கக்கூடிய ஓரளவு சிறப்பான வேகப்பந்து வீச்சுப் பிரிவு, எங்களிடம் காணப்படுகிறது. ஆனால், துடுப்பாட்டப் பிரிவாக, நாங்கள் ஓட்டங்களைப் பெற வேண்டும். அதுவே எங்களது பிரதான சவாலாக அமையவுள்ளது. அணி வீரர்கள், கடந்த சில வாரங்களாக, மிகவும் கடுமையாக உழைத்துள்ளனர்" என்றார்.

அணியின் தயார்படுத்தல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், "தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு அவர்களை எதிர்த்தாடவும், அவர்களது கள நிலைமைகளுக்குப் பயின்று கொள்ளவும், எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். எங்களது முதலாவது டெஸ்டை, பொக்ஸிங் தினத்தில் கொண்டாடுவதற்கு, எங்களுக்குக் கிட்டத்தட்ட 12 நாட்கள் உள்ளன. அந்த நாட்களை, எம்மால் முடிந்தளவு பயன்படுத்தி, நிலைமைகளைச் சரிப்படுத்த முயல்வோம்" என்றார்.

அண்மைக்காலத்தில், அனேகமான அணிகள், சொந்த நாட்டில் சிறப்பாக விளையாடுகின்ற போதிலும், எதிரணியின் நாடுகளில் தடுமாறுகின்ற நிலையில், அதை ஏற்றுக் கொண்ட மத்தியூஸ், வெளிநாடுகளில் வெற்றியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--