2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பழிதீர்த்தார் ஜொய்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில், பெல்ஃபாஸ்ட்டில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை, 2-2 என்ற ரீதியில் சமப்படுத்தியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய், அயர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, கடந்த போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட எட் ஜொய்ஸ் ஆட்டமிழக்காமல், 148 பந்துகளில், 3, ஆறு ஓட்டங்கள், 19, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 160 ஓட்டங்களைப் பெற்றதோடு, கரி வில்சன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக தவால்ட் ஸல்ட்ரான் இரண்டு விக்கெட்டுகளையும், மிர்வாய்ஸ் அஷ்ரஃப், மொஹம்மட் நபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, நஜிபுல்லா ஸட்ரான் 54, ரஷீட் கான் 40, அஸ்கர் ஸ்டனிஸ்காய் 32, ரஹ்மட் ஷா 30, மொஹம்மட் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிரைன் மூன்று விக்கெட்டுகளையும், பரி மக்கிராத்தி, பீற்றர் சேஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடரின் நாயகனாக எட் ஜொய்ஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X