2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

லா லிகா தொடர்: றியல் மட்ரிட், பார்சிலோனா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், நேற்று (10) இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

றியல் மட்ரிட், மேலதிக நேரத்தில் தனது அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸினால் பெறப்பட்ட கோலினால், 3-2 என்ற கோல் கணக்கில் டெபோர்ட்டிவோ லா கொறனா அணியைத் தோற்கடித்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கழகச் சாதனையாக, 35 போட்டிகளில் தோற்கடிக்கப்படாத அணியாக விளங்குகிறது.

காயமடைந்த கரித் பேல் தவிர, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரீம் பென்ஸீமா, லூகா மோட்ரிக் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில், தாக்குதல்  திறனற்ற அணி போலவே றியல் தென்பட்டிருந்தது. எனினும், 50ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்ற அல்வரோ மொராட்டா, றியலுக்கு முன்னிலையை வழங்கினார். இருந்தபோதும், 63ஆவது, 65ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்ற ஜோசேலு, டெபோர்ட்டிவோவுக்கு முன்னிலையை வழங்கினார். எனினும் போட்டி முடிவடைய ஆறு நிமிடங்கள் இருக்கையில், மரியானோ டயஸின் கோலின் மூலம் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்திய றியல், மேலதிக நிமிடத்தில் றாமோஸ் பெற்ற கோலின் மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

பார்சிலோனா, 3-0 என்ற கோல் கணக்கில் ஒசசுனா அணியைத் தோற்கடித்தது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும், லூயிஸ் சுவாரஸ் ஒரு கோலினையும் பெற்றார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .