2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

19 வருடங்களின் பின் பாகிஸ்தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இரட்டைச் சதம்

Super User   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்இழப்பிற்கு 511 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் தனது  முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான்அணி சார்பில்  தௌபீக் உமர் இரட்டைச் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இரட்டைச் சதம் குவித்த 7 ஆவது பாகிஸ்தான்  ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தௌபீக் உமர் ஆவார். 1992 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மன்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில்  பாகிஸ்தான் வீரர் அமீர் சொஹைல் 205 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதன்பின் டெஸ்ட் இன்னிங்ஸில்  இரட்டைச் சதம் குவித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தௌபீக் உமர் ஆவார்.

இலங்கைப் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத் 126 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சானக வெலகெதர 108 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று மாலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்டமுடிவின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.

தரங்க பரணவிதான உமர் குல்லின் பந்துவீச்சில் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். தற்போது பாகிஸ்தான் அணி 267 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.


 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X