Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. பெங்களுரில் நடைபெற்ற இப்போட்டியில், வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 207 ஓட்டங்கள் தேவையான நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, போட்டியின் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 478 ஓட்டங்களையும் இந்திய அணி 495 ஓட்டங்கையும் பெற்றன. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டமுடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று காலை 223 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் 73 ஓட்டங்களையும் ஷேன் வட்ஸன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஓஜா 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹசாந்த் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி வெற்றி பெறுவதற்குஇரண்டாவது இன்னிங்ஸில் 207 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. சதீஸ்வர் புஜாரா 72 ஓட்டங்களையும் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட்டினால் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் 2-0 விகிதத்தில் இந்திய அணி தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது போட்டியினதும் இச்சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளை சச்சின் டெண்டுல்கர் வென்றார்.
Niththi Wednesday, 13 October 2010 09:38 PM
சச்சின் அற்புதமான வீரர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
5 hours ago