2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இலங்கை – ஆஸி போட்டி மழையினால் பாதிப்பு

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் பாதிப்படைந்துள்ளது.

கொழும்பில் இப்போட்டி நடைபெறும் ஆர்.பிரேமதாஸ அரங்கு அமைந்துள்ள பகுதியில் தற்போது கடும் மழை பெய்துவருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி ஆட்டம் நிறுத்தப்பட்டபோது 32.5ஓவரக்ளில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

உபுல் தரங்க 6 ஓட்டங்களுடனும் திலகரட்ன தில்ஷான் 4 ஓட்டங்களுடனும் மஹேல ஜயவர்தன 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் குமார் சங்கக்கார 73 ஓட்டங்களுடனும்  திலான் சமரவீர 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

(Pix by: REUTERS)

 


 


  Comments - 0

  • Thilak Saturday, 05 March 2011 11:42 PM

    Rain rain go away

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .