2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையுடன் முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு சிறந்த அடித்தளம்

Super User   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் தனது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி இன்று காலை 118 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. மொஹமட் ஹாபிஸ் 75 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்முடிவின்போது தௌபீக் உமர் 109 ஓட்டங்களுடனும் அஸார் அலி 60 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 


  Comments - 0

  • maazeen Thursday, 20 October 2011 04:03 PM

    நல்லா விளையாடுங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X