2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இந்தியத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள்: பீற்றர் சிடில்

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணியில் அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் இந்திய மண்ணில் வைத்து சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துவார்கள் என அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீற்றர் சிடில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 4 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றவுள்ள அவஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு புறப்படவுள்ளதோடு, முதலாவது போட்டி இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படும் முதற்தொகுதி வீரர்களுடன் இந்தியாவிற்கு புறப்படவுள்ள பீற்றர் சிடில், இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும் தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் இத்தொடரில் சாதிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவிற்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், மிற்சல் ஸ்ரார்க், மிற்சல் ஜோன்சன், ஜக்ஸன் பேர்ட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் உம் சகலதுறை வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போட்டியொன்றில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் இணைந்து நிச்சயமாக 20 விக்கெட்டுக்களை ஒரு போட்டியில் கைப்பற்ற முடியும் எனத் தெரிவித்த பீற்றர் சிடில், தங்களது பந்துவீச்சுப் பலமானது எனவும், பந்துவீச்சு அணி குறித்த நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .