2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஐ.பி. எல் இன்று ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு முதற் போட்டி ஆரம்பமாகின்றது. முதற்ப் போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் அணி, கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராட்சிய, அபுதாபி செய்க் சைட் மைதனத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் ஒவ்வொரு தடவை ஐ.பி.எல் தொடரில் சம்பியன் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மும்பாய் இந்தியன்ஸ் அணியும், 2012 ஆம் ஆண்டு கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியும் வெற்றி வாகை சூடியிருந்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருட தொடரில் புதிய ஏலம் நடைபெற்றது. இதில் வீரர்கள் பலர் அணிகளுக்குள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. சிலர் புதிதாக இந்த தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக புதிய எதிர்பார்ப்புக்கள் இந்த தொடரில் உருவாகியுள்ளன. இலங்கை சார்பாக லசித் மாலிங்க, திசர பெரேரா, முத்தையா முரளிதரன் ஆகியோர் மட்டுமே ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .