Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள, ருஹுணு பல்கலைக்கழகத்தில் இந்திய நன்கொடை நிதியுதவியில், 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ரவீந்திரநாத்தாகூர் கேட்போர் கூடம், இன்று (09), திறந்துவைக்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் ருஹுணு பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தனர்.
தென்னிலங்கையில் பெரியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, இந்தக் கேட்போர் கூடம், 1,500 இருக்கை வசதிகளை கொண்டமைந்துள்ளது.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, இந்தியத் தேசப் பிதாவான மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்தக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக, அவரது செய்தி மற்றும் போதனைகள் நிரம்பிய ஒரு சுருக்கமான காணொலிக் காட்சியும் காண்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .