2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

கொழும்பில் அதி நவீன ரயில் பெட்டி

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன எஸ் - 14 ரக ரயில் பெட்டி விரைவில் மலையக ரயில் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி, கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தது.

மலைநாட்டு ரயில் சேவைக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ரயில் பெட்டியொன்றில் பெறுமதி 10.3 மில்லியன் அமெரிக்க டொலராகும் (1839.5 மில்லியன் ரூபாய்).

இவ்வாறான ஒன்பது ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

மலையகத்துக்கான ரயில் பாதைகள் அதிகளவு வளைவுகளை கொண்டுள்ளதால், நீளமான ரயில் பெட்டிகளை கொண்டு ரயில்கள் பயணிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நவீன ரக ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .