இங்கிலாந்துக் குழாமில் ஜொஸ் பட்லர்

பாகிஸ்தானுக்கெதிரான இங்கிலாந்தின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான குழாமில் ஜொஸ் பட்லர் இடம்பெற்றுள்ளார். இவர் தவிர இளம் சுழற்பந்துவீச்சாளர் டொமினிக் பெஸ் முதற்தடவையாக இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரான நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் வின்ஸ் இக்குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோ, டொம் பெஸ், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜொஸ் பட்லர், அலிஸ்டயர் குக், டேவிட் மலன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.


இங்கிலாந்துக் குழாமில் ஜொஸ் பட்லர்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.