இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் இன்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்தை நியூசிலாந்து வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 72 (46), மார்டின் கப்தில் 65 (40), மார்க் சப்மன் 20 (13), டிம் செய்பேர்ட் ஆட்டமிழக்காமல் 14 (05) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் ரஷீட் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் ஜோர்டான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டேவிட் மலன் 59 (40), அலெக்ஸ் ஹேல்ஸ் 47 (24), டேவிட் வில்லி 21 (10), சாம் பில்லிங்ஸ் 12 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் சான்ட்னெர், ட்ரெண்ட் போல்ட், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் செளதி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவானார்.


இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.