இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், டனேடினில் இன்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் நியூசிலாந்து வென்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 335 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 138 (106), ஜோ றூட் 102 (101), ஜேஸன் றோய் 42 (41), டொம் குரான் ஆட்டமிழக்காமல் 22 (10) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இஷ் சோதி 4, ட்ரெண்ட் போல்ட், கொலின் மன்றோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 336 ஓட்டங்களென்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 181 (147), டொம் லேதம் 71 (67), கேன் வில்லியம்சன் 45 (48), கொலின் டி கிரான்ட்ஹொம் 23 (12), ஹென்றி நிக்கொல்ஸ் ஆட்டமிழக்காமல் 13 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டொம் குரான் 2, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக றொஸ் டெய்லர் தெரிவானார்.


இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.