இந்தியாக்கெதிரான இ – 20 தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரையும் நியூசிலாந்து கைப்பற்றியது.

இந்தியாவின் நியூசிலாந்துக்கான இச்சுற்றுப்பயணத்தில், 1-4 என ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இழந்திருந்த நியூசிலாந்து, ஹமில்டனில் இன்று இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை வென்றதன் மூலமே இத்தொடரை  2-1 எனக் கைப்பற்றியது.

 

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

நியூசிலாந்து: 212/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொலின் மன்றோ 72 (40), டிம் செய்வேர்ட் 43 (25), கொலின் டி கிரான்ட்ஹொம் 30 (16), கேன் வில்லியம்சன் 27 (21), டரைல் மிற்செல் ஆ.இ 19 (11), றொஸ் டெய்லர் 14 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 2/26 [4], புவ்னேஷ்வர் குமார் 1/37 [4])

இந்தியா: 208/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விஜய் ஷங்கர் 43 (28), ரோகித் ஷர்மா 38 (32),  தினேஷ் கார்த்திக் ஆ.இ 33 (16), றிஷப் பண்ட் 28 (12), குருனால் பாண்டியா ஆ.இ 26 (13), ஹர்டிக் பாண்டியா 21 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: டரைல் மிற்செல் 2/27 [3], மிற்செல் சான்ட்னெர் 2/32 [3], பிளைர் டிக்னர் 1/34 [4], ஸ்கொட் குக்லெஜின் 1/37 [4])

போட்டியின் நாயகன்: கொலின் மன்றோ

தொடரின் நாயகன்: டிம் செய்வேர்ட்


இந்தியாக்கெதிரான இ – 20 தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.