இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் குல்தீப்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முன்னேறினார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்த குல்தீப், ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் இமாட் வசீம், ஒன்பதாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

இதுதவிர, இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் மிற்செல் சான்ட்னெர், 14ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. குல்தீப் யாதவ், 3. ஷடாப் கான், 4. இமாட் வசீம், 5. அடில் ரஷீட், 6. அடம் ஸாம்பா, 7. ஷகிப் அல் ஹசன், 8. இஷ் சோதி, 9. பாஹீம் அஷ்ரப், 10. மிற்செல் சான்ட்னெர்.

இதேவேளை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஓர் அரைச்சதம் அடங்கலாக 89 ஓட்டங்களை பெற்ற இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோகித் ஷர்மா, 10ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஏழாம் இடத்தை அடைந்துள்ளார்.

அந்தவகையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. கொலின் மன்றோ, 3. ஆரோன் பின்ஞ், 4. எவின் லூயிஸ், 5. கிளென் மக்ஸ்வெல், 6. பக்கர் ஸமன், 7. ரோகித் ஷர்மா, 8. அலெக்ஸ் ஹேல்ஸ், 9. ஜேசன் றோய், 10. லோகேஷ் ராகுல்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரை 2-1 எனக் கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், ஐந்தாமிடத்திலிருந்த தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்தைத் பின்தள்ளி மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாகிஸ்தான், 2. இந்தியா, 3. தென்னாபிரிக்கா, 4. இங்கிலாந்து, 5. அவுஸ்திரேலியா, 6. நியூசிலாந்து, 7. மேற்கிந்தியத் தீவுகள், 8. ஆப்கானிஸ்தான், 9. இலங்கை, 10. பங்களாதேஷ்.

இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் குல்தீப்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.