இலங்கைக்கு முதலாவது பகல் - இரவு டெஸ்ட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டுபாயில், தமது முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டியை இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.  

குறித்த தொடரின் முதலாவது போட்டி, அபுதாபியில் இம்மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், பகல் - இரவு டெஸ்ட், அடுத்த மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது.  

பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெறவுள்ளது.     


இலங்கைக்கு முதலாவது பகல் - இரவு டெஸ்ட்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.