இ-20 தொடரிலும் ஷகிப் இல்லை?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன், இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

தனது விரல் காயம் முழுமையாகக் குணமடையவில்லை என சிரேஷ்ட சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹஸன் தெரிவித்தமையைத் தொடர்ந்தே, இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில் ஷகிப் அல் ஹஸன் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகின்றது.

குறித்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான அறிக்கையெதுவும் இல்லையென்றபோதும் காயம் குணமடைய மேலும் இரண்டு வாரங்கள் செல்லுமென்று வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் ஆதலால், இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தான் பங்கேற்பது சந்தேகமென ஷகிப் அல் ஹஸன் தெரிவித்துள்ளார்.


இ-20 தொடரிலும் ஷகிப் இல்லை?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.