ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் வக்னர்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர், ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, 11ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இன்னொரு நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

குறித்த இரண்டு மாற்றங்கள் தவிர, டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான முதல் 10 இடங்களில் எவ்விதமும் மாற்றமில்லாத நிலையில், முதல் 10 பேரின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. ஜேம்ஸ் அன்டர்சன், 3. ககிஸோ றபாடா, 4. வேர்ணன் பிலாந்தர், 5. நீல் வக்னர், 6. இரவீந்திர ஜடேஜா, 7. ட்ரெண்ட் போல்ட், 8. ஜேஸன் ஹோல்டர், மொஹமட் அப்பாஸ், 10. இரவிச்சந்திரன் அஷ்வின்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில், மேற்குறிப்பிடப்பட்ட டெஸ்டில் 107 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் ஹென்றி நிக்கொல்ஸ், ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

அந்தவகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையிலும் மேற்குறிப்பிட்டது தவிர மாற்றமெதுவும் இல்லாத நிலையில், முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. கேன் வில்லியம்சன், 3. செட்டேஸ்வர் புஜாரா, 4. ஸ்டீவ் ஸ்மித், 5. ஹென்றி நிக்கொல்ஸ், 6. ஜோ றூட், 7. டேவிட் வோணர், 8. ஏய்டன் மார்க்ரம், 9. குயின்டன் டி கொக், 10. பப் டு பிளெஸி.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அவ்வணியை 3-0 என வெள்ளையடித்திருந்த இங்கிலாந்து, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாகிஸ்தான், 2. இந்தியா, 3. இங்கிலாந்து, 4. அவுஸ்திரேலியா, 5. தென்னாபிரிக்கா, 6. நியூசிலாந்து, 7. மேற்கிந்தியத் தீவுகள், 8. ஆப்கானிஸ்தான், 9. இலங்கை, 10. பங்களாதேஷ், 11. ஸ்கொட்லாந்து, 12. சிம்பாப்வே, 13. நெதர்லாந்து, 14. நேபாளம், 15. ஐக்கிய அரபு அமீரகம், 16. ஹொங் கொங், 17. அயர்லாந்து, 18. ஓமான்.

இதேவேளை, மேற்படி தொடரில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீட், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.

இது தவிர, இத்தொடரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டான், 14ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. ஷடாப் கான், 3. அடில் ரஷீட், 4. இமான் வசீம், 5. குல்தீப் யாதவ், 6. அடம் ஸாம்பா, 7. ஷகிப் அல் ஹஸன் 8. இஷ் சோதி, 9. ஃபாஹீம் அஷ்ரப், 10. கிறிஸ் ஜோர்டான்.

இந்நிலையில், முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. கொலின் மன்றோ, 3. கிளென் மக்ஸ்வெல், 4. ஆரோன் பின்ஞ், 5. லோகேஷ் ராகுல், 6. ஹஸரத்துல்லா ஸஸாய், 7. டார்சி ஷோர்ட், 8. எவின் லூயிஸ், 9. ஃபக்கர் ஸமன், 10. அலெக்ஸ் ஹேல்ஸ்.

ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் வக்னர்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.