கொன்ககாப்: ஐ.அமெரிக்கா, பனாமா வெற்றி

கொன்ககாப் தங்கக் கிண்ணப் போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில், ஐக்கிய அமெரிக்கா, பனாமா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

சிறிய அணியான மார்ட்டினிக்கை எதிர்கொண்ட ஐ.அமெரிக்கா, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் முதற்பாதியில், கோல்கள் எவையும் பெறப்படாத நிலையில், 54, 64, 76ஆவது நிமிடங்களில் ஐ.அமெரிக்கா சார்பிலும், 66, 75ஆவது நிமிடங்களில் மார்ட்டினிக் சார்பிலும் கோல்கள் பெறப்பட்டன.

பனாமா, நிக்கராகுவா அணிக்குமிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணி வெற்றிபெற்றது. நிக்கராகுவா அணி, 49ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் பெற்றாலும், 50, 57ஆவது நிமிடங்களில் பெற்ற கோல் மூலம், பனாமா வெற்றிபெற்றது.


கொன்ககாப்: ஐ.அமெரிக்கா, பனாமா வெற்றி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.