சுப்பர் 6-இல் மேற்கிந்தியத் தீவுகள்

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றுள்ளது. ஹராரேயில் நேற்று இடம்பெற்ற அயர்லாந்துட்னான போட்டியில் 52 ஓட்டங்களுடன் வென்றதுடன் சேர்த்து, தாம் இதுவரையில் விளையாடியுள்ள மூன்று குழுநிலைப் போட்டிகளில் வென்றுள்ளமையைத் தொடர்ந்தே சுப்பர் 6 சுற்றுக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

மேற்கிந்தியத் தீவுகள்: 257/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொவ்மன் பவல் 101 (100), ஜேஸன் ஹோல்டர் 54 (71), ஷிம்ரோன் ஹெட்மயர் 36 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் முர்டாக் 4/41, அன்டி மக்பிரைன் 2/45)

அயர்லாந்து: 205/10 (46.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: எட் ஜோய்ஸ் 63 (86), கெவின் ஓ பிரயன் 38 (36), நைஜல் ஓ பிரயன் 34 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேமார் றோச் 4/27, கெஷ்ரிக் வில்லியம்ஸ் 4/43, ஜேஸன் ஹோல்டர் 2/49)

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஹொங் கொங்குடனான போட்டியில் வென்றதுடன் தான் இதுவரையில் விளையாடியுள்ள மூன்று குழுநிலைப் போட்டிகளில் வென்றுள்ள சிம்பாப்வே, தமது குழுவில் இவ்வாறான பெறுபேற்றைக் கொண்டு ஏற்கெனவே சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்ற ஸ்கொட்லாந்துடன் சேர்த்து தாமும் சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

 


சுப்பர் 6-இல் மேற்கிந்தியத் தீவுகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.