ஜுவென்டஸை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு எச் போட்டியொன்றில், இறுதி ஐந்து நிமிடங்களில் பெறப்பட்ட இரண்டு கோல்கள் காரணமாக ஜுவென்டஸை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இப்போட்டியில், சக ஜுவென்டஸ் பின்கள வீரர் லியனார்டோ பொனூச்சி நீண்ட தூரத்திலிருந்து கொடுத்த பந்தை 65ஆவது நிமிடத்தில் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுவென்டஸுக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், குறித்த கோலோ தீர்மானமிக்க வெற்றிக் கோலாக அமையப் போகின்றது என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், போட்டி முடிவடைய 11 நிமிடங்கள் இருக்கையில் மாற்று வீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஜுவான் மாத்தா, போட்டி முடிவடைய நான்கு நிமிடங்கள் இருக்கையில் பெனால்டி எல்லைக்கருகிலிருந்து பெறப்பட்ட பிறீ கிக் மூலம் கோலைப் பெற கோலெண்ணிக்கையை மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.

இந்நிலையில், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அஷ்லி யங்கின் பிறீ கிக்கை ஜுவென்டஸின் அலெக்ஸ் ஸான்ட்ரோ ஓவ்ண் கோலாக மாற்ற இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. 

இதேவேளை, இன்று அதிகாலையும் நேற்றும் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக்கின் ஏனைய குழுநிலைப் போட்டிகளில், முக்கிய போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,

குழு ஜி   றியல் மட்ரிட் (ஸ்பெய்ன்) 5 – 0 விக்டோரியா பிளிஸின் (செக் குடியரசு)

முதற்பாதி முடிவில் 4-0

கரிம் பென்ஸீமா 20, 37

கஸேமீரோ 23

கரெத் பேல் 40

டொனி க்றூஸ் 67

மைதானம்: விக்டோரியா பிளிஸின் அணியின் மைதானம்

 

குழு எவ்  மன்செஸ்டர் சிற்றி (இங்கிலாந்து) 6 – 0 ஷக்தார் டொனெஸ்க் (உக்ரேன்)

முதற்பாதி முடிவில் 2-0

டேவிட் சில்வா 13                                                          

கப்ரியல் ஜெஸூஸ் 24 (பெ), 72 (பெ), 90+2

ரஹீம் ஸ்டேர்லிங் 48

றியாட் மஹ்ரேஸ் 84

மைதானம்: மன்செஸ்டர் சிற்றியின் மைதானம்

 

குழு ஈ  பெயார்ண் மியூனிச் (ஜேர்மனி) 2 – 0 ஏ.ஈ.கே ஏதென்ஸ் (கிரேக்கம்)

முதற்பாதி முடிவில் 1-0

றொபேர்ட் லெவன்டோஸ்கி 31 (பெ), 71

மைதானம்: பெயார்ண் மியூனிச்சின் மைதானம்

 

குழு ஜி றோமா (இத்தாலி) 2 – 1 சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ (ரஷ்யா)

முதற்பாதி முடிவில்1-0

கொஸ்டான் மனோலஸ் 4            அர்னோர் சிகூர்சன்  51

லொரென்ஸோ பெல்லெகிரினி 59


ஜுவென்டஸை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.