2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

டொட்டமுண்டை வென்றது லெவர்குசன்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பயேர் லெவர்குசனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பொரூசியா டொட்டமுண்டுக்குமிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.

டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூலியன் பிரான்ட் பெற்றதோடு, லெவர்குசன் சார்பாக மூஸா டியபி, புளோரியன் விர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

புண்டெஸ்லீகா புள்ளிகள் பட்டியலில் 36 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 32 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பயேர் லெவர்குசன் காணப்படுகின்றது. எனினும், மியூனிச்சை விட லெவர்குசன் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 32 புள்ளிகளுடன் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக் காணப்படுகின்றது. எனினும், லெய்ப்ஸிக்கும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது. நான்காமிடத்தில் 29 புள்ளிகளுடன் டொட்டமுண்ட் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .