தரவரிசையில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கெதிரான தொடர் ஆரம்பிக்கும் முன்னர் ஐந்தாமிடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து, இந்தியாவுக்கெதிரான தொடரை 4-1 என்ற ரீதியில் வென்றதையடுத்தே நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், நான்காமிடத்திலிருந்த இங்கிலாந்து ஐந்தாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

அந்தவகையில், முதல் 10 டெஸ்ட் அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. இந்தியா, 2. தென்னாபிரிக்கா, 3. அவுஸ்திரேலியா, 4. இங்கிலாந்து, 5. நியூசிலாந்து, 6. இலங்கை, 7. பாகிஸ்தான், 8. மேற்கிந்தியத் தீவுகள், 9. பங்களாதேஷ், 10. சிம்பாப்வே.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுகான தரவரிசையில், நேற்று முன்தினம் முடிவடைந்த இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்டில் குறிப்பிடத்தக்கதாக சோபிக்காதபோதும் முதலிடத்தில் இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தொடருகின்றார்.

குறித்த டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் சதம் பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட், ஐந்தாமிடத்திலிருந்து நான்காமிடத்துகு முன்னேறியுள்ளார்.

இதேவேளை, குறித்த டெஸ்டுடன் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான அலிஸ்டயர் குக், இந்த டெஸ்டில் 218 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 11 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்துடன் ஓய்வுபெற்றுள்ளார்.

முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராத் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. கேன் வில்லியம்சன், 4. ஜோ றூட், 5. டேவிட் வோணர், 6. செட்டேஸ்வர் புஜாரா, 7. திமுத் கருணாரத்ன, 8. தினேஷ் சந்திமால், 9. டீன் எல்கர், 10. அலிஸ்டயர் குக்.

இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், மூன்றாமிடத்திலிருந்த ரவீந்திர ஜடேஜா நான்காமிடத்துக்கு கீழிறங்க, நான்காமிடத்திலிருந்த வேர்ணன் பிலாந்தர் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். இது தவிர பந்துவீச்சாளர்களுக்கான முதல் 10 ஒடங்களில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை.

முதல் 10 பந்துவீச்சளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேம்ஸ் அன்டர்சன், 2. கஜிஸோ றபாடா, 3. வேர்ணன் பிலாந்தர், 4. இரவீந்திர ஜடேஜா, 5. பற் கமின்ஸ், 6. ட்ரெண்ட் போல்ட், 7. ரங்கன ஹேரத், 8. இரவிச்சந்திரன் அஷ்வின், 9. நீல் வக்னர், 10. ஜொஷ் ஹேசில்வூட்.

தரவரிசையில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.