X

X
’தோல்விக்கு நானும் ஒரு காரணம்’ கோஹ்லி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்வதாக, பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்  தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு முதலில் துடுப்பெடுத்தாடிய போது, 200 ஓட்டங்களைக் கடக்கும் என எதிர்ப்பார்ப்பபட்டாலும் வில்லியர்ஸ், மற்றும் கோஹ்லியின் அடுத்தடுத்த ஆட்டமிழப்பு அந்த எதிர்ப்பார்ப்பை இல்லாமல் செய்தது.  

வில்லியர்ஸ் மிகச் சிறப்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்தாலும், விராட் கோஹ்லி வழமைக்கு மாறாக மெதுவாக விளையாடி 33 பந்துகளில் 31 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டர்ர.

இது தொடர்பில் போட்டியின் பின்னர் கருத்து வெளியிட்ட கோஹ்லி, "15 ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தோம். நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் டிவில்லியர்ஸும் நானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தோம். ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்தப் போட்டியிலிருந்து நிறைய அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


’தோல்விக்கு நானும் ஒரு காரணம்’ கோஹ்லி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.