2019 ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்கிறார் மக்கியூரி?

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லெய்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான ஹரி மக்கியூரியை 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு தங்களால் கைச்ச்சாத்திட முடியும் என்ற நம்பிக்கையில் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணி வீரருமான ஹரி மக்கியூரியை 85 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கே லெய்செஸ்டர் சிற்றி மதிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹரி மக்கியூரியை கைச்சாத்திடுவதற்கு 85 மில்லியின் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை என்ற உயர் எண்ணிக்கையை செலவிடமுடியாதென மன்செஸ்டர் யுனைட்டெட்டின் வைரிகளான இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்தே 75 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ஹரி மக்கியூரியை கைச்சாத்திடலாம் என மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்க்கிறது.

இதேவேளை, நடப்பு பருவகாலத்தில் சம்பியன்ஸ் லீக்கை விளையாடலாம் என்பதற்காக மன்செஸ்டர் சிற்றிக்கு செல்வதையே ஹரி மக்கியூரி விரும்புகின்றபோதும், தனது புதிய மன்செஸ்டர் யுனைட்டெட் அணியை ஹரி மக்கியூரியைச் சுற்றியே ஒலெ குனார் சொல்க்ஜர் கட்டமைக்க விரும்புகின்றார்.

இந்நிலையில், ஹரி மக்கியூரியை கைச்சாத்திடுவதற்கான பணத்தை, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்கு தமது முன்களவீரரான றொமெலு லுக்காக்குவை வழங்குவதன் மூலமாக பெறுவதற்கு மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்ப்பதாகக் கருதப்படுகிறது.

றொமெலு லுக்காக்குவில் தற்போது இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் றொமெலு லுக்காக்குவுக்கு 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் பண ஒப்பந்தத்தை இன்டர் மிலனிடம் மன்செஸ்டர் யுனைட்டெட் கோருவதாகக் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .