லா லிகா: வென்றது பார்சிலோனா

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற லெவன்டே அணியுடனான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ், போலின்ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, றியல் மட்ரிட், செல்டா விகோ அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணியும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கரித் பேல் பெற்றார். செல்டா விகோ சார்பாக, டானியல் வஸ், மக்ஸி கோமிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


லா லிகா: வென்றது பார்சிலோனா

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.